Monday, 16 May 2011

காலங்கள்
கரைந்தோடுகிறது
அதில் கவலைகளை களைந்தெடுக்க
கடினப்பட்டுப் போகிறோம்...

நொடிக்கொரு நினைவு
மணிக்கொரு மறதி
மாதத்திற்கு ஒரு துன்பம்
என நம் இதயத்தை
நாமே ஏழ்மையாக்கி விடுகிறோம்...

காக்கை கூட்டுக்குள்ளே தான்
மணிக்குயில் பிறக்கிறது..!
சேற்றின் வாசத்தில் தான்
செந்தாமரை மலர்கிறது..!

மூச்சடக்க பயந்தால்
முத்து குளிப்பது சுலபமாகாது...

விதைப்போல் வீழ வேண்டும்
அழிவதற்காக அல்ல
ஒவ்வொரு முறையும் எழுவதற்காக...

வாழ்க்கையில் முயற்சி இல்லையேல்
இதயமே நம்பிக்கையற்றுப் போகும்...

விதைக்கவே மறந்து விட்டு
அறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?

ருட்டே இல்லாமல் போனால்
நீ விடியலைத் தேடி ஓடியிருப்பாயா?

முயற்சிகள் இருக்கிற இடத்தில் தான்
வெற்றிகள் முரசு கொட்டுகின்றன...

தற்காக
கொஞ்சம் முயற்சித்து பாருங்கள்
இமயம் வளைந்துக் கொடுக்கும்...
வானம் வசப்படும்.
.

நன்றி ; கவிதை வீதி

No comments:

Post a Comment