உணரப்படாத உண்மைகளுடன் காலத்தை நம்பி கடக்கும் ..என் வாழ்நாளின் நிகழ்வுகளுடன்.நான் கேட்டு.. பார்த்து..ரசித்த விடயங்களையும் என் மனம் உங்களுடன் பேசுகிறது ...!!!!
Wednesday, 22 June 2011
Wednesday, 8 June 2011
காலத்தின் பெருவெளியில்........

காலத்தின் பெருவெளியில்
கரைந்து போன....
இறந்த காலத்தை.......
நினைத்து பார்க்கிறேன்.....
கொஞ்சம்....
வாழ்க்கை பயணத்தில்...
மாறிப்போன வழிமுறைகளும்
சூழ்நிலைகள் சூறாவளியாகிபோன...
சோகங்களும்.....
சில தருணங்களில்
வாழ்க்கையே மாறிப்போன
கொடுமைகளும்...
இன்னும் நிகழ்ந்துகொண்டேதான்...
இருக்கின்றது....
ஒரு வேலை...
என் இறப்பிற்க்கு,
அப்பால் நிகழக்கூடும்..
நானும்
காலத்தின் பெருவெளியில்
கரைந்து போக....
இறப்பிற்கு இன்னும் சில நாட்கள்......!!!

எடுபடவில்லை, தூரத்தில்
கருங்குயிலின் கீதம் !
வரவேண்டியவர்கள் எல்லாம்
வந்தார்கள்
வந்தவர்கள் எல்லாம்
போனார்கள்
இங்கே
ஆறுதல் சொல்ல
யாருண்டு எனக்கு..
பத்து மாதம்
படுத்திருந்தக் கருவறை
எப்படி இருந்ததென்பதை அறியாதவனுக்கு
இறந்த பின்
கூடும் அறை
எப்படி இருந்தால் என்ன..?
தொப்புள் கொடியில்
தொடர்ந்த கண்ணீர் துளியின் ஈரம்
உயிர்க்கொடி உடையும் போதும்
அப்படியேக் காயாமல்!
என் இறப்பின்
நாட்கள் எண்ணப்படுவதால்
இன்று முதல் தூக்கத்திற்குத்
துக்கதினம் அனுசரிக்கப் படுகின்றன
விழிகளுக்கு விடுமுறை விடப்படுகின்றன
ஆனால்
அழும் என் கண்களுக்கு மட்டும்
அணைக்கட்டுப் போட முடியவில்லை.
என்
இருவிழிகள் இரைக்கும் கண்ணீரை
எடைப்போட்டு பாருங்கள்
கடலின் அடர்த்தியை விடக்
கனமானதாக இருக்கும்!
இப்போதெல்லாம்
என் மூச்சிக்காற்றோடு
நாசித்துளை வழியாக
நரம்போடுகூட உறவாடி விட்டு தான்
வெளியே வருகிறது
ஏக்கமும்.. பயமும்...
பார்க்கும் திசையை
வெகுநேரம் வெறித்தப் பார்வைப்
பார்வைக்கின்றன கண்கள்.
உதிர்ந்த மலர்கள்
என் மீது விழும்போதெல்லாம்
சந்தோசப்பட்ட என் மனது
இப்போது
கண்ணீர் விடுகிறது
மலர்ந்த மலர்களுக்காக...!
வாழ்க்கைப் படம்
திரையிடப்பட்டு ஒளிப்பதிவு
செய்யப்படுகிறது
எங்கு
திரையிடப்படுமோ?
பூமி மிதித்தோடும்
பூதவுடல் இறுதியில்
பூமியால் மிதிக்கப்படுவதே
இயற்கையின் நியதி..!
.தாகம்...தண்ணீரால்
தீர்க்க முடியாதத் தாகம்
தாய்பாலின்
கடைசித் துளித் தீரப்போகிறது!
நண்பர்கள் கூட்டம்
நாளை வரும்
நால்வரின் கைகளால்
கடைசி நாள் பயணம்!
என்னோடு என் கனவுகளையும்
எரித்துவிடுங்கள் இல்லையேன்றால் கதறியழும்
என் கனவுகளை காப்பாற்றுவததற்கு யாருமில்லை!
இன்று வரை மண்ணில் விளைந்ததை
நான் உண்டேன் நாளை விழைந்த மண் என்னை உட்கொள்ளும்!
தண்ணீரில் மலர்ந்த மலர்கள்
கண்ணீரில் நனைந்தபடி
என் இறுதி ஊர்வலத்தில்..!
நாளை இந்த சூரியன் வரும் நேரம்
நான் இந்த பூமியிலேப் புதைக்கப்பட்டிருப்பேன்
இதோ நால்வர்
என்னை புதைத்து விட்டு போனார்கள்
இந்தக் கருமத்திற்க்காகவா இத்தனை போராட்டங்கள்
இந்த உலகினில்!

உருண்டு கொண்டிருக்கும் உலகில்...
நடந்து கொண்டிருக்கும் நாட்களில்...
ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஓடை நான்...!
தூரத்தில் இருக்கும் இலக்கு கைதட்டி அழைக்க... ஓடிக்கொண்டிருக்கிறேன் கால் வலிக்க...! இளைப்பாற இருக்கிறது கவிதையின் மடி....! ஓடுகின்ற பாதை எதுவானால் என்ன பதிக்கின்ற தடம் என் பெயரை உரக்க உச்சரிக்கும் ஒருமுறையேனும் ...! அந்த நம்பிக்கையில்... காத்திருக்கும் நிமிடங்களை கருத்தில்கொண்டு தொலைந்துபோன என் தூக்கங்களையெல்லாம்
தீர்க்க முடியாத பிரச்னைகள் விரைவில் தீர - ஒரு ஆன்மீக ஆலோசனை

'யார் மன அடக்கமாய் அற நூலில் சொன்னபடி நடக்கிறாரோ..அவர்..கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.
யார் தருமத்தை ஆடம்பரத்திற்காகச் செய்யாமல் தம் தேவையைக் குறைத்துக் கொண்டு வாழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.
யார் ஐம்புலன்களை அடக்கும் வல்லமை பெற்றவரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் தன்னை பிறர் நிந்தித்தாலும் மறுமொழி கூறாமல் இருக்கின்றாரோ,தமக்குத் துன்பம் செய்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ,யார் பிறருக்குக் கொடுத்துக் கொண்டும் தான் யாரிடமும் யாசிக்காமலும் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் விருந்தினரை நன்கு உபசரிக்கின்றாரோ, யார் வேதம் ஓதுகின்றாரோ,யார் எதற்கும் அருவருப்பு அடையாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் தருமத்தை உணர்ந்து தாய்,தந்தையைப் போற்றுகின்றாரோ யார் பகலில் உறங்காமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் பாவத்தை செய்யாமல் இருக்கின்றாரோ, உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் பிறர் பொருளைக் கவராமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் தன் மனைவியிடம் மட்டும் உரிய காலத்தில் சேர்க்கைக் கொண்டு, பிறர் மனைவியைக் கனவிலும் கருதாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் மரணத்தைக் கண்டு அஞ்சாமல் பயத்தை விலக்கி, போர்க்களத்தில் வெற்றி பெற விரும்புகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் உயிரே போனாலும் பொய் சொல்லாது உண்மையையே பேசுகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் நிந்திக்கத் தகாத செயல்களை உடையவராக இருக்கின்றாரோ, யார் தம் பொருளைச் சாதுக்களுக்கு வழங்குகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் இளமையில் பிரம்மச்சரியத்தை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் கல்வி கற்றுப் பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் பிறரை அச்சுறுத்துவதில்லையோ, பிறர் அச்சுறுத்தலுக்கு பயப்படுவது இல்லையோ, யார் தம்மைப் போல பிறரையும் கருதுகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் தான் இன்புறுவது போல் பிறரும் இன்புற வேண்டும் என எண்ணுகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.
யார் எல்லா தேவர்களையும் வழிபட்டு, எல்லாத் தருமங்களையும் கேட்டு அடக்கம் உடையவராக இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.
யார் தற்பெருமையை விரும்பாமல் பிறரைப் பெருமைப்படுத்திப் புகழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் தம் முன்னோர்களுக்காகத் தூய மனத்துடன் ஒவ்வொரு திதியிலும் சிரார்த்தம் செய்கிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் தம் கோபத்தை அடக்கி, பிறரையும் கோபம் அடையாமல் இருக்கச் செய்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் மது, மாமிசம் மகளிர் போகம் இவற்றை விலக்குகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு உட்கொண்டும்,சந்ததிக்காகவே மனைவியுடன் கூடியும்,உண்மை பேசுவதற்காக மட்டுமே பேச்சையும் கொண்டு வாழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் எல்லா உயிர்களுக்கும் நாதனாயிருப்பவரிடம் பக்தி செலுத்துகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் எல்லாக் கர்மங்களையும் கண்ணனிடம் அர்ப்பணம் செய்துவிட்டு அச்சமின்றி இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் உலகங்களைப் படைத்தவரும் சாதுக்களுக்கு நாதரும் யாகங்களால் வழிபடத்தக்கவருமான பிரம்மனை பக்தியுடன் வழிபடுகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் இந்திரனும்,விஷ்ணுவும்,ருத்திரரும் போற்றும் மாகாதேவரான சிவபெருமானை எப்போதும் துதி செய்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் கடினமான துன்பத்தை கடக்கத்தக்க இந்த உபதேசத்தை படிக்கின்றாரோ, யார் கேட்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
-பகவத்கீதை
கரைகின்ற ஆயுளை கரைத்து விடுகின்றேன் கணனி முன்னே

மாலை வேளைகளில் விளையாடும் சிறுவர் கூட்டத்தினை வெறித்தப் படியே !
இயலாமைகளுக்குக் காரணங்கள் தேடியப் படியே மனம் அலைகின்றது
இல்லாதவைகள் இருந்திருந்தால் என்ற வினாக்கள் எழுப்பியப் படியே !
சுடாத வெய்யிலும் சுதந்திரத் தென்றலும் பசுமர நிழல்களில் தவழ்கின்றது
படாத பார்வைப் போல கண்டு காணமலும் போய் விடுகின்றேன்.
பாடும் பறவைகளின், விளையாடும் குழந்தைகளின்,
ஓடும் வாகனங்களின், தவழ்ந்தோதோடும் மேகங்களின்,
எந்தச் சத்தமும் கேட்கவில்லை எனக்கு - கண்ணாடி வழியே
விறைத்தப் படியே எனது கண்கள்.
வீணாக்கியப் பொழுதுகளையும்,
வீணாய்ப் போன மனிதர்களையும் குறைச் சொல்லியப்படியே
கரைகின்ற ஆயுளை தினமும்
கரைத்து விடுகின்றேன் கணனி முன்னே !
காலைச் சூரியனைக் காணமலேயே நாள்கள் நகர்கின்றன,
மாலை வேளைகளில் விளையாடும் சிறுவர் கூட்டத்தினை வெறித்தப் படியே !
விரயமாகும் நேரங்களைப் பணமாக்கிக் கொள்ளத் தான் ஆசை - மனிதர்களிடம்
பரவிவரும் மனநோய் என்னையும் பிடித்து விடுமோ என்ற அச்சம் தான் மிச்சம்.
சுடாத வெய்யிலும் சுதந்திரத் தென்றலும் பசுமர நிழல்களில் தவழ்கின்றது
படாத பார்வைப் போல கண்டு காணமலும் போய் விடுகின்றேன்.
சுட்டெரித்த வெயிலும் அடிமைக் காற்றும் இருந்தனவே - அதுவும் இனித்தது
வெட்டைவெளிகளிலே நான் நடந்த போது.
காலம் கரைகின்றது பயனற்றப் படியே !
காலம் வரும்
அதுவரை நான் -
கரைகின்ற ஆயுளை தினமும்
கரைத்து விடுகின்றேன் கணனி முன்னே !
சாதனைகளும் வேதனைகளும் இடம்மாறிக் கொண்டு
என் கனவுகளை
வன்புணராது தடம் ஒன்றை விடியும்
முன் வைத்துவிடும் என்ற
நம்பிக்கையிலே !
இன்று மட்டும்
கரைகின்ற ஆயுளை
கரைத்து விடுகின்றேன் கணனி முன்னே !

“மரணத்தைப் பற்றி கவலைப்படாதே நீ இருக்கும்வரை மரணம் வரப்போவதில்லை அது என்னவென்று உனக்கு தெரியாது அது வந்தபோது நீயே இருக்கப்போவதில்லை பிறகு ஏன் கவலை”
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
நல்ல உறக்கத்தைத் தரும் உணவுப் பொருள்கள் !
உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும். உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதாம்: பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. இந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.
தேநீர்: உறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை. அந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.
வாழைப்பழம்: மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்தோடு இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது. இந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது.
இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.
பால்: பால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.
ஓட்ஸ்: நீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது. இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.
செர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.