Monday, 17 March 2014

இமைகளை திருடிக்கொண்டு 
கனவுகளை கண்டு மகிழ் என 
கட்டளையிடுகிறாய்!!! 
அமைதியாய் இருந்துகொண்டு 
இம்சையை இனிமையாய் தருகிறாய்!!! 
உன்னைப்பார்த்ததை தவிற 
பிழையேதும் செய்யவில்லை நான்... 
ஆனால் 
தவிப்பும் தாகமும் 
தண்டனையாய் பெற்றுக்கொண்டிருக்கிறேன். 
இவையாவும் இன்றுவரை நீ 
அறியாமல் இருப்பதனால் என் இதயப்பகுதி 
புண்ணாய் எரிகிறது
இந்த தீராவலிதான் 
காதலா!!!!!!!!

வாழ்க்கை உனக்காகதான்!........

வாழ்க்கை ஒன்றும் சூதாட்டம் அல்ல,
எல்லாம் அதிர்ஷ்டத்தால் வருவதற்கு!
இன்பத்தை தேட - சுயநலப்
பகடையை உருட்டாதே!
நிச்சயம் பகடையின் வெற்றி - பாம்பைத்
தாண்டி தான் போக வேண்டும்!
பரமபதம் வாழ்க்கை ஒன்றும்
தேவை இல்லை உனக்கு!
விழித்திரு! சிரித்திரு! கை கொடுத்திரு!
வீரமாயிரு!அன்பாயிரு! புரிந்திரு!
ஞாயிறின் வெளிச்சத்தையும்
திங்களின் குளுமையையும் காட்டிரு!
கோபம் விடு! பொறாமை விடு!
வீணான விவாதம் விடு! பேராசை விடு!
எதிர்பார்ப்பை விடு! கண்ணீரை விடு!
கண்கள் சிவக்க பேசாதே!
உன் ஒளி கண்கள் ஒன்றும் அதற்காக இல்லை.
பிறர் இதயம் விரும்ப வாழ்ந்திடு!
இந்த உலகம் உனக்காகதான்!
.
என்றும் ,
அன்புடன் 
உன் ...
சிவா.

Saturday, 14 April 2012


மனிதனை மனிதநேயத்தோடு மனிதனாக மதித்து நடந்தால் நம் வாழ்வே சொர்க்கமாகும்.
'முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவியாய் இருப்போம்
முடியாவிடில் மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்காமலாவது இருப்போம்.;

அனுபவங்களில் ஒன்று..!


ஆரம்ப நாட்கள் கொடுத்தது
அறிமுகம் இல்லாத பல
முகம்களையும் மட்டுமல்ல
அச்சத்தையும் சேர்த்து தான்!

இன்னும் பல வருடங்கள்
முதுகிலே சுமையும்
மூளையில் அறிவையும்..,
நினைக்கும் போதே
நெஞ்சை கனத்த சோகம்..!

இயற்கையின் நியதியை மீறி
அந்த நாட்களின் இரவுகள்
விடியாத பொழுதுகளாகவே
இருந்துவிடக்கூடாதா? என்று
இறைவனை வேண்டிக்கொள்ளும் வயசு..!

மாலைப் பொழுதுகளில் கிடைக்கும்
சிறு சிறு சந்தோசங்களை எல்லாம்
களைந்து போய்விடும்
காலை நேரக் கணப்பொழுதுகளில்,
அம்மாவின் அதட்டல்களிலும்
அயலவர்கள், கிண்டல்களிலும்,
பிடிவாதங்கள் அத்தனையும்
பிடிமானம் அற்றதாகிவிடும்!

'சிறகு முளைத்துப்
பறக்க நினைக்கையிலே
சிறைக்கு அனுப்புவதா?...
சலித்துக்கொள்ளும் மனசு!!

பால்ய வயசினிலே,
பள்ளி செல்ல தொடங்கும் நாட்களின் ..
பலரது அனுபவங்கள்
இவை தானே!!

Monday, 9 January 2012



ஆசைகளை மட்டும் அடுக்கி அடுக்கி
நிறைவேறவில்லையே என்று தினம்
எண்ணி எண்ணி பாதி தாகம் தீர்த்த
அந்த அவல நாட்கள் இனியும் வேண்டாம்.!
கவலைகளை மட்டுமே எண்ணி எண்ணி
இரவுகளில் எல்லாம் விழிகள் தூக்கம் தொலைத்த
அந்த இரவுகளைக் கூட
நான் எண்ணிப் பார்க்க விரும்பவில்லை !.

நாளை நாளை என்று தினங்களும்,
வாரங்களும் ,மாதம் கடந்து, இன்று
வருடம் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டது.!
துப்பும் எச்சில் கூட
தூரம் சென்று விழவேண்டும்
என்று எண்ணுகிறது மனது.
ஆனால் தோல்விகளை மட்டும்
தோள்களில் சுமக்க எப்படித்தான்
விரும்பியே ஏற்கிறதோ தெரியவில்லை.!

இனி வரும் நாட்களில் முடிவுரைகள் கூட
முற்றுப்புள்ளியின்றிதான் எழுதப்படும்.
இதுநாள் வரை தோல்விகள் சுமந்த
இந்த தோள்கள் இனி வரும் நாட்களில்
இமயம் தாண்டும் சாதனைகளை சுமக்கும்.!

Tuesday, 27 December 2011

Sunday, 18 December 2011

"எண்ணங்கள் அழகானால்
எல்லாமே அழகாகும் "!உலகத்தில்
என் எண்ணங்களை
நான் அழகு படுத்துகிறேன்!
என் வாழ்வை
உன் அருளால்
நீ அழகு படுத்து
இறைவா!

ச‌ல‌ன‌ம‌ற்ற
‌மனம் வேண்டி,
தவறுகளை
தவிர்த்துவிட்டு
அமைதியில் ஆழ்ந்தாலும்!

கோப‌மோ,
வெறுப்போ,
பொறாமையோ,
ஏதேனும் ஒன்றை
ஏற்ப‌டுத்திவிட்டே செல்கின்ற‌ன
‌அடுத்த‌வ‌ர்க‌ளின் த‌வ‌றுக‌ள்!

உங்களின் மிகச்சிறந்த நண்பனாக கடவுளைபோல் யாரும் இருக்கமுடியாது, கடவுளிடம் நீங்கள் என்ன பேசினாலும் அவர் உங்களை தவறாக நினைப்பதில்லை, உங்கள் கருத்துக்கு எதிர்கருத்து கூறி விவாதம் செய்வதில்லை, நீங்கள் சொல்வதை அவர் வேறுயாரிடமும் சொல்வதில்லை.

கனவுகள் கண்ட இரவுகள் போய்..
கவிதை வடிக்கும் இரவை உணர்கிறேன்..

பலநாள் கனவுகள் ஒருநாளில் அழியுது.. ஒருநாள் நிகழ்வு... பலநாள் நினைவாகுது... இதுதான் வாழ்கையா..
எனக்கு எதுகும் புரியவில்லை..

சிரித்துக்கொண்டே செல்கிறேன்...
செல்லும் பாதை அறியாமல்...
என்று எனது பாதையை... அறிகிறேனோ அன்றுதான்..
அழுவேன்
இழப்புக்களை.. நினைத்து................................... அதுவரை புன்னகை பூத்த.. வாழ்வு என்று நினைத்தபடி.... எங்கோ செல்கிறேன்.....

Saturday, 17 December 2011


என்னையே நான் அறிகிறேன்

என் இனியத் தனிமையில் .

படிந்த வரி.......!!!

இருந்து என்ன
ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன
ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்

- கல்யாண்ஜி


மிகச் சிக்கலான பல பிரச்சினைகளுக்கு மிக எளிதாகவே தீர்வுகள் அமைந்துவிடுகின்றன. இவ்வுண்மையினை உணர்த்தத்தான் அவ்வப்போது பெரிய பிரச்சினைகள் வந்து போகின்றனவோ என்னவோ? 'செத்துப் போய்விடலாம் போலிருக்கிறது. இதிலிருந்து நான் எப்படி மீண்டு வரப்போகிறேன்' என்று புலம்பித் தவித்த எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். அவர்களில் யாரும் இதுவரை இறந்ததாய்த் தகவலில்லை.

காலத்தின் காற்றோட்டம் நம்மை எங்கெங்கோ அடித்துச் செல்கிறது; எதெதையோ அடித்துவந்து நம்மிடம் சேர்ப்பிக்கிறது; எதெதையோ பிரித்தும் கொண்டு சென்றுவிடுகிறது. எல்லா நிகழ்விலும் மீதமிருப்பவை நம்மீது அழுந்தப் பதிகிற அனுபவ முத்திரைகள்தான்.

அனுபவங்கள் மனிதனை இழைக்கின்றன; அனுபவங்கள் மனிதனாகின்றன; அனுபவங்களே மனிதனாய் அலைவதாக உணர்வது அலாதியானது.

ஒவ்வொரு மரணத்திலும் எண்ணிக்கை மறந்த அனுபவங்கள் அழிந்து போகின்றன. மரணத்துக்கு முன்னதான அனுபவங்களின் அளவிலேயே மதிப்படைகிறது ஒவ்வொரு மரணமும். மரணம் கூட ஒருவகையில் அனுபவம்தானோ?

வீழ்வதென்றாலும் மகிழ்ச்சியாய் ஏற்கிறது காற்றில் அசைந்தாடும் இறகு...

மரணத்தை கண்டு அஞ்சும் என்னை உதிரும் இலையின் மெளனம் கேலி பேசுகிறது.

எல்லாவற்றையும் சேர்த்து என்னுடையது என்றேன் நான், என்னையும் சேர்த்து தன்னுடையது என்றது மரணம்.

கலைந்து கிடப்பதே வாழ்க்கை நேர்க்கோட்டில் நிற்பது மரணம்.