Thursday, 26 May 2011



தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது பலபேர் பலமுறையில் சொல்வார்கள். ஆனால் அமைதியான சூழலில் (அதிகாலை உகந்தது) இரு கால்களையும் மடக்கி உட்கார்ந்து இரு கண்களையும் மூடிய நிலையில் அமைதியாக நம்முடைய மனம் அலைபாய்வதை நிறுத்தி ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து இருப்பதே தியானம் என அழைக்கப்படுகிறது. இந்த தியானம் செய்வதனால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. அதில் சில குறிப்பிட்ட நன்மைகளை கீழே கொடுத்துள்ளேன்.
  • ஆக்சிஜன் உபயோகத்தை கட்டுக்குள் வைக்கிறது.
  • இதய துடிப்பு வேகமாக இருந்தால் அதை கட்டு படுத்துகிறது.
  • உயர் ரத்த அழுத்த பிரச்சினையை குறைக்கிறது.
  • உங்கள் மனதை பரப்பரப்பில் இருந்து நிம்மதி அடைய செய்கிறது.
  • நம்முடைய உடல் பகுதிகள் சீராக இயங்க உதவுகிறது.
  • உடல் எடையை குறைக்கலாம்.
  • உடலிற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.
  • உடல் சக்தி வீணாவதை தடுக்கும்.
  • தன்னம்பிக்கையை ஏற்ப்படுத்தும்.
  • மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்.
  • ஞாபக சக்தி அதிகரிக்கும்.
  • தேவையில்லாமல் கோபப்படுவதை குறைக்கும்.
  • மாணவர்களின் படிக்கும் சக்தி அதிகரிக்கும்.
  • பேராசையை தவிர்க்கும்.
  • உடலின் சக்தி,வேகம் அதிகரிக்கும்.
  • கண்பார்வை அதிகரிக்கும்.
  • அமைதியான மன நிலையை கொடுக்கும்.
  • மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும்.
  • முடிவு எடுக்கும் திறனை அதிகபடுத்தும்.
  • மற்றவர்களிடம் இருந்து உங்களின் நிலையை அதிகரிக்கும்.
  • போதை பொருளுக்கு அடிமையாகி இருந்தால் மீண்டு வர துணை புரியும்.
  • ஓயாமல் எதையாவது யோசித்து கொண்டிருப்பதை தடுத்து மனதை ஒருநிலை படுத்தும்.
  • சுவாச பிரச்சினைகளை தீர்க்கும்.
  • புகை பழக்கத்தில் இருந்து மீள முடியும்.
  • எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க உதவும்.
  • லட்சியங்களை எளிதில் அடைய உதவும்.
  • ஒரு தகவலை உள்வாங்கும் திறனை அதிகரிக்கும்.
  • எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் மன்னிக்க மனதை தயார் செய்யும்.
  • நீங்கள் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால் தங்களுக்கும் இறைவனுக்கும் இடையே இனம் புரியாத ஆழமான உணர்வை உருவாக்கும்.
  • நண்பர்கள் வட்டம் பெருகும்.
  • தக்க சமயத்தில் தகுந்த முடிவை எடுக்கும் திறனை அதிகர்க்கும்.
  • சமூகத்தில் தங்களின் நிலை உயரும்.
  • கிடைத்தை வைத்து சந்தோசப்படும் அறிவை கற்று கொடுக்கும்.
  • மன அழுத்தம், மனநோய் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட உதவி புரியும்.
  • சமூக அக்கறை அதிகரிக்கும்.
  • எதுக்காவும் யாரிடமும் கோபப்படுவதை தவிர்க்கும்.
  • தூக்கம் வராமல் கஷ்ட படுபவர்கள் படுத்த உடனே தூக்கம் நன்றாக வரும்.
  • தூக்கத்தில் கண்ட கனவுகள் வருவதை தவிர்த்து நிம்மதியாக தூங்க முடியும்.
  • மருத்துவமனைக்கு செல்லும் தேவையை குறைக்கும்.
  • மருந்து மாத்திரைகளிடம் இருந்து உங்களை விடுவிக்கும்.
  • மாணவர்கள் பாடங்கள் கவனிக்கும் திறனை அதிகர்க்கும்.
  • தற்காப்பை உருவாக்கும்.
  • வாழ்க்கையின் மேடு,பள்ளங்களை பக்குவமாக கையாள மனதை தயார்படுத்தும்.
  • வயதிற்கேற்ற மன முதிர்வை உருவாக்கும்.
  • இசையில் நாட்டமுள்ளவர்களுக்கு கலைத்திறனை அதிகரிக்கும்.
  • ரத்த சுத்திகரிப்பை அதிகரிக்கும்.
  • நீங்கள் மறந்துவிட்ட சில முக்கிய நிகழ்வுகளை ஞாபகபடுத்தும்.
  • உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை நீக்கும்.
  • உடலில் உள்ள கொழுப்பு சக்தியை குறைக்க உதவும்.
  • இதய நோய்களை கட்டுபடுத்தும்.
  • உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாட்டை சீர்படுத்தும்.
  • வியர்வை அதிகம் வெளியேறுவதை சீர்படுத்தும்.
  • தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் அதற்க்கு தீர்வு காணலாம்.
  • ஆஸ்மா நோயிலிருந்து பூரண குணமடையலாம்.
  • தீய பழக்கங்களை ஒழிக்கும்.
  • நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • கற்பனை திறன் அதிகரிக்கும்.
  • மற்றவர்கள் கூறும் அறிவுரையை தட்டி கழிக்காமல் பொறுமையோடு கேட்டு அதன்படி நடக்கும் மனநிலையை உருவாக்கும்.
  • உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும்.
  • உங்களின் அறிவுத்திறன் வளரும் விகிதம் அதிகமாகும்.
  • பெரியவர்களை மதித்து நடக்கும் உயரிய மனம் உருவாகும்.
  • உங்களுக்கு இருக்கும் கடமைகளை உணர செய்யும்.
  • கடமைகளில் வெற்றியும் பெறச்செய்யும்.

Wednesday, 25 May 2011


என்னைவிட்டு நீ பிரிந்தாலும்

என்றும் நீ என்னோடுதான் உன்னைப் பற்றிய நினைவுகள் எந்தன் உயிரில் கலந்த உறவுகள் உயிர் உடல் விட்டு பிரியும் வரை உன் நினைவு என்னை விட்டு அகலாது...!!!

என்னைப் போல எப்போதும் நினைக்காவிட்டாலும்

என்னை நீ எப்போதாவது நினைப்பாய் நிஜம் ..................!!!

உன்னைப் பார்க்க நீ தடைவிதிக்கலாம்

உன்னை நினைக்க நீ தடைவிதிக்க முடியாது.


இரவின் நீளம் எல்லாம்

தனிமையோடு தான் போகிறது ஒவ்வொரு முறையும்

உன் நினைவுகளை தொடும்போது

வண்ணத்துபூச்சி சிறகின்றி துடிக்கும்

வேதனை எனக்குள். அறுந்துவிட்ட பட்டம்

கையில் அகப்படாமலே போகிறது....... என் கண்ணீரின் துளியில்

உன் இதயம் துடிக்குமானால்

நரம்புகளை கூட அருத்துவிடுகிறேன். சொல்லாமல் வரும் மரணமும்

சத்தம் இல்லாமல் சாகடிக்கும்

காதலும் ஒன்றுதான் இரண்டிலும் இதயத்தின்

துடிப்பு

யாருக்கும் தெரிவதில்லை....!!! மீள முடியாத வேதனை

மறக்க முடியாத பாதைகள்

மனம் கனமாய் போகிறது........... மௌனம் மட்டுமே வார்த்தை ஆனால்

புல்லாங்குழல் கூட இசையில்

கண்ணீர் சிந்தும் .........


Tuesday, 24 May 2011


விடியல்களின் வெளிச்சத்தில்
விலாசம் தேடி
விரைந்து கொண்டேயிருக்கிறது
என் பயணம் !

இமைகளின் இடுக்கில்
இழைகிற சோம்பலில்
கருகப் பார்க்கிறது
என் கனவு !

எட்டிப்போன வெற்றியின்
ஏக்கம் மறந்து போய்
ஓய்வுக்கு அலைகிறது
என் மூளை !

இடர்கள் மிகுந்துவிட்ட
இருட்டுப் பயணத்தில்
இன்னும் வறளத் துவங்கவில்லை
என் நம்பிக்கை ஒளி !

வெற்றியை நோக்கிய
வெறி கொண்ட ஓட்டத்தில்
இனி ஓயப்போவதில்லை
என் பாதம் !

உலகை மறந்துவிட்ட
உழைப்பின் உச்சத்தில்
சிதறத்தான் போகிறது
என் இலக்கு !

வியர்வையின் குளியலில்
முயற்சியின் முடியலில்
விடியத்தான் போகிறது
என் கிழக்கு !!

அறுந்து போன பட்டம் போல
அந்தரத்தில் ஊசலாடுகிறது வாழ்க்கை ...

வெயிலோ ..மழையோ ...
எதுவாக இருப்பினும் ...
நிழலோ ..குடையோ ..
ஒரு சிலருக்கே வாய்க்கிறது...!

அலாரங்களுக்கு முன்பாகவே எழுந்து ...
அவசரங்களின் ஊர்வலங்களில் கலந்து ...
ஏதோ ஒன்றின் பின்னால் இருட்டுக்குள் ஓடி ..
வெளிச்சத்தில் தொலைந்து போகிறோம் ...!

இடையில் கால் தடுக்கிய இடத்தில் நின்று
திரும்பிப்பார்த்தால் ....
நேற்றைகளின் சமாதி
நெடுந்தூரம் நீள்கிறது ...!

பின்பு ...
அழுக்கு படிந்த காற்றுக்குள்
பயணித்து... பயணித்து...
புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கிறோம் ..!

எல்லோரும் அவரவர் வீடுகளில்
அடைபட்டவுடன் ஒப்புக்கொள்கிறது மனசு ..
உலகம் உருண்டையென்று...!

உன்னிடம் நான்
பேசுவதற்கு நிறைய
செய்திகள் இருந்தன
வார்த்தைகள் தொலைத்தபடி .....

உன்னிடம் நான்
பழகுவதற்கு நிறைய
நாட்கள் இருந்தன
நேரம் தவிர்த்தபடி,,,

உன்னிடம் நான்
பயணிப்பதற்கு நிறைய
தூரம் இருந்தன
பாதைகள் அடைத்தபடி...

உன்னிடம் நான்
நேசம்கொள்ள நிறைய
காரணங்கள் இருந்தன
என்னை மறைத்தபடி...
சுவாமி விவேகானந்தர்

விரும்பும் போதெல்லாம் விரும்புகிறேன் என்பதை விட‌வெறுத்த போதும் விரும்பினேன் என்பதே உண்மையான அன்பு


அவமானங்கள் கூட வெற்றிக்கான பாதை அமைக்கும்;நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால்

நீ தனிமையில் இருக்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறதோஅது தான் உன் வாழ்கையை தீர்மானிக்கும்

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்

தனுஷ் ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது வாங்கியது .சிலர் என்ன அவர் சிறப்பா செய்து விட்டார் வெறும் லுங்கி கட்டி கொண்டு நடித்தார் என்று சொல்பவர்களுக்கு .முதலில் அவரின் ஆடுகளம் படத்தின் நடிப்பிற்கு உலகம் முழுவதும் கிடைத்த ஆதரவே இப்போ தேசிய விருது அளவில் கொண்டு போய் இருக்கு

ஆடுகளம் படத்தில் தனுஷ் அவர்களின் எதார்த்த நடிப்பு கூட அந்த படத்தின் வெற்றிக்கு ஒரு காரணாமாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது
" அவர் இந்த படத்தில் ஒரு சராசரி இளைஞன் பார்வையில் சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்

Sunday, 22 May 2011


என்னால்
நோகடிக்கப்பட்ட
உன் மனம்!!!

என்னால்
கோபப்பட வைத்த
உன் உள்ளம்!!!

அதனால்

நீ படும்
வேதனைகளை விட
அதிக வலியை -நான்
உணருகிறேன்

வலிகளுக்கு
காரணம்
நான் என்பதால்!!!

மன்னித்துவிடு என்னை!!!

சந்தர்ப்பங்களும்......!!!
நேரங்களும்...........!!!
இடங்களும்............!!!
என்னுடன் என்றும்
பகைதான் .

நீ
பார்க்கும்-என்
ஒவ்வொரு செயலும்
உன்னை
சந்தேகம் கொள்ள
வைக்கிறது.

கோபிக்காதே....
உன்னில்
என்னில்
குற்றமில்லை...!!!

சபிக்கப்பட்ட-என்
வாழ்வில்
காலம்!!! நேரம்!!! இடம்!!!
என்
கனவில் கூட
சாதகமில்லை-எனக்கு.

Saturday, 21 May 2011


சிரிக்கவும் தேவையில்லை....
அறிவுரையும் அவசியமில்லை.... ஆனால்
பகுத்தறிவின் பண்பட்ட
செயல் அல்ல இது!!!
பின்னே....!!!!

பக்தி நெறியின் உச்சக்கட்டமா?
பாசத்தின் எல்லை மீறலா?
விளங்கவில்லை எனக்கு...

உங்களுக்கு....????

Friday, 20 May 2011


உணர்வுகள் மதிக்கப்படுவதால்
உறவுகள் மறக்கப்படுகின்றன......!!!!

உறவுகள் மதிக்கப்படுவதால்
உணர்வுகள் மறக்கப்படுகின்றன.......!!!!

உறவுகள் விடுத்து
உணர்வுகள் வெறுத்து
கால்தடம் இல்லா
தனித்தீவில் இடம்பெயர
ஆசைப்படுகின்றேன்...!!!

உன்னை மறப்பதற்காக அல்ல
என்னை மறப்பதற்காக....!!!!

உன் உணர்வுகளை

புரிந்து கொள்ளாத

ஒருவனுக்காக.....

உன் உணர்வுகளில்

புதைந்து கிடக்கும்

ஒருவனை......

இழந்து விடதோ....

Tuesday, 17 May 2011


இமைப்பதை போலவே
உன்னை நினைக்கவும்
நான் எப்போதும் நினைத்ததில்லை
அது தானாகவே நிகழ்த்து விடுகிறது...

பயணங்களில்
ஜன்னலோர இருக்கைகள்
கிடைக்கும்போதெல்லாம்
நீ எனக்குள்ளே நீயாகவே பிறந்துவிடுகிறாய்...

தூக்கம் இல்லாமல் துடிக்கும்போது
தானாகவே துள்ளிகுதித்துக்கொண்டு ஓடிவருகிறது
உன்னுடைய பசுமையான நினைவுகள்
என்னை தூங்கவைபதற்க்கும் ஏங்கவைபதற்க்கும்..

என் நினைவுகள் உன் மடியில்
கண் உறங்கும்போது விழிகள்
தன்னிச்சையாக கண்ணீர் சிந்துவதை
உன்னால் தவிர்க்க முடியாது.

நீ எரித்த என்னுடைய
காதல் கடிதங்களின் சாம்பல்கூட
உன்னை சபித்து கொண்டுதான் இருக்கும்.

ஒன்றாகவே இருந்தாலும்
கண்கள் கலங்குவது
இமைகளுக்கு தெரிவதில்லை.

காதலில் தோற்ற போதுதான்
உன்னை அதிகமாக
நேசிக்க தொடங்கினேன்.

என் இதயத்தின் ஓசையில்
கலைந்துபோன ஒரு கருவின்
விசும்பல் கேட்கிறது.

என்னை பற்றிய நினைவுகள்
துளியும் இல்லாமல்
உன்னை பற்றிய நினைவுகள்
சிறிதும் மங்காமல்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்...

நனவில் நீ வருவாய் என
எதிர்பர்த்திருந்தும்
கனவிலாவது கண்ணில்படுவாய் என
காத்திருந்தும் தோற்றுபோகவே
உன்னை காணும் பொருட்டு
எழுந்திரிக்க எத்தனிக்கும்போதுதான்
தெரிந்தது என் கால்கள்
சங்கிலியால் கட்டப்பட்டிருப்பது..