
விடியல்களின் வெளிச்சத்தில்
விலாசம் தேடி
விரைந்து கொண்டேயிருக்கிறது
என் பயணம் !
இமைகளின் இடுக்கில்
இழைகிற சோம்பலில்
கருகப் பார்க்கிறது
என் கனவு !
எட்டிப்போன வெற்றியின்
ஏக்கம் மறந்து போய்
ஓய்வுக்கு அலைகிறது
என் மூளை !
இடர்கள் மிகுந்துவிட்ட
இருட்டுப் பயணத்தில்
இன்னும் வறளத் துவங்கவில்லை
என் நம்பிக்கை ஒளி !
வெற்றியை நோக்கிய
வெறி கொண்ட ஓட்டத்தில்
இனி ஓயப்போவதில்லை
என் பாதம் !
உலகை மறந்துவிட்ட
உழைப்பின் உச்சத்தில்
சிதறத்தான் போகிறது
என் இலக்கு !
வியர்வையின் குளியலில்
முயற்சியின் முடியலில்
விடியத்தான் போகிறது
என் கிழக்கு !!
No comments:
Post a Comment