Wednesday, 8 June 2011

கரைகின்ற ஆயுளை கரைத்து விடுகின்றேன் கணனி முன்னே


காலைச் சூரியனைக் காணமலேயே நாட்கள் நகர்கின்றன,
மாலை வேளைகளில் விளையாடும் சிறுவர் கூட்டத்தினை வெறித்தப் படியே !

இயலாமைகளுக்குக் காரணங்கள் தேடியப் படியே மனம் அலைகின்றது
இல்லாதவைகள் இருந்திருந்தால் என்ற வினாக்கள் எழுப்பியப் படியே !

சுடாத வெய்யிலும் சுதந்திரத் தென்றலும் பசுமர நிழல்களில் தவழ்கின்றது
படாத பார்வைப் போல கண்டு காணமலும் போய் விடுகின்றேன்.

பாடும் பறவைகளின், விளையாடும் குழந்தைகளின்,
ஓடும் வாகனங்களின், தவழ்ந்தோதோடும் மேகங்களின்,

எந்தச் சத்தமும் கேட்கவில்லை எனக்கு - கண்ணாடி வழியே
விறைத்தப் படியே எனது கண்கள்.

வீணாக்கியப் பொழுதுகளையும்,
வீணாய்ப் போன மனிதர்களையும் குறைச் சொல்லியப்படியே

கரைகின்ற ஆயுளை தினமும்
கரைத்து விடுகின்றேன் கணனி முன்னே !

காலைச் சூரியனைக் காணமலேயே நாள்கள் நகர்கின்றன,
மாலை வேளைகளில் விளையாடும் சிறுவர் கூட்டத்தினை வெறித்தப் படியே !

விரயமாகும் நேரங்களைப் பணமாக்கிக் கொள்ளத் தான் ஆசை - மனிதர்களிடம்
பரவிவரும் மனநோய் என்னையும் பிடித்து விடுமோ என்ற அச்சம் தான் மிச்சம்.

சுடாத வெய்யிலும் சுதந்திரத் தென்றலும் பசுமர நிழல்களில் தவழ்கின்றது
படாத பார்வைப் போல கண்டு காணமலும் போய் விடுகின்றேன்.

சுட்டெரித்த வெயிலும் அடிமைக் காற்றும் இருந்தனவே - அதுவும் இனித்தது
வெட்டைவெளிகளிலே நான் நடந்த போது.

காலம் கரைகின்றது பயனற்றப் படியே !
காலம் வரும்

அதுவரை நான் -
கரைகின்ற ஆயுளை தினமும்
கரைத்து விடுகின்றேன் கணனி முன்னே !

சாதனைகளும் வேதனைகளும் இடம்மாறிக் கொண்டு
என் கனவுகளை
வன்புணராது தடம் ஒன்றை விடியும்
முன் வைத்துவிடும் என்ற
நம்பிக்கையிலே !

இன்று மட்டும்
கரைகின்ற ஆயுளை
கரைத்து விடுகின்றேன் கணனி முன்னே !

No comments:

Post a Comment